கதாபாத்திரம் : பையன்
நடிகர்கள் & கதாபாத்திரப் பெயர்கள் :
வி.எஸ்.எம். ராஜா ராம ஐயர் - ஜகதீஷ்
எஸ்.ஆர். கிருஷன ஐயங்கார் - பில்லு ராவ்
எம்.ஜி.ராமச்சந்திரன் - பையன்
எஸ்.ஆர்.மீனாக்ஷி சுந்தரம் - பாலு
எம்.எஸ்.அனந்த நாராயண ஐயர் - பிரதர் புஷ்பம்
மாஸ்டர் எஸ். பி. கல்யணம் - கந்தன்
எம்.ஆர். பாலு - சுந்தர்
க்ளவுன் குஞ்சிதபாதம் பிள்ளை - வேலைக்கார ராமன்
எம்.ஜி.சக்கரபாணி - முக்கிய வேடம்
கே.ரங்கநாயகி - காமாட்சி
டி.டீ. கனகம் - மீனாட்சி
எஸ்.எஸ்.ராஜாமணி - சாந்தா
டி.எஸ். தமயந்தி பாய் -
அவலக்ஷ்மி ராஜ்யம் - நடனமாது
சாரதா - தளுக்கு சுந்தரி
ஜி. விஸ்வேஸ்வரியம்மா -
கதை & வசனம் : வி.எஸ். எம். ராஜாராம ஐயர்
இசை : ராசி
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன் & ராஜகோபால் இயர்
ஒளிப்பதிவு : கமல் கோஷ்
ஒலிப்பதிவு : ஜோதிஷ் சந்திர சின்ஹா
செட்டிங் : ரஸ்டப்ஜி மேஸ்திரி
ஸ்டுடியோ : மோஷன் பிக்சர் பிரட்யூசர்ஸ் லிமிடெட்
எடிட்டிங் : ஆர். ராஜகோபால்
தயாரிப்பு : வி.எஸ்.கே.முத்துராம்ஐயர்
தயாரிப்பு நிறுவனம் : வி. எஸ். டாக்கீஸ்,மதுரை
இயக்கம் : டி. பி. கைலாசம் - ஆர். பிரகாஷ்
கதைச் சுருக்கம்
ஜெகதீஷ் என்ற ஒரு பெரிய மிராசுதாருக்குப் பட்டணம் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அவர் ஏராளமான பணத்தை எடுத்துக்கொண்டு தனிமையாக புறப்பட்டு வந்து சேருகிறார்.ரயில் ஸ்டேஷனில் நின்றதும் பில்லுராவ் என்ற வஞ்சகன் பார்த்து அவர் பட்டணத்துக்கு புதியவர் என்று யூகத்தால் தெரிந்து அவரை அணுகி, தன்னை கனவானாகவும், பரோபகாரியாகவும் நினைக்கும்படி தந்திரமாக பேசி வசப்படுத்தி விடுகிறான். அச்சமயம் கந்தன் என்ற ஏழைப்பையன் ஜெகதீஷின் சட்டைப்பையிலிருந்து மணிபர்சை திருடும்போது கண்டு போலீசாரிடம் ஒப்புவிக்கபடுகிறான். aஅவனுடைய பிரலாபத்தை கேட்ட ஜெகதீஷ் அவனை விடுவித்து இனாமும் கொடுத்து மறுபடியும் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பி விடுகிறார். அப்போது பில்லு அவரிடம் உள்ளம் பணத்தை தான் பத்திரபடுத்தி வைப்பதாக சொல்லி அவர் மனிபுர்சை வாங்கி வைத்துக்கொள்கிறான். அப்பால் ஜெகதீஷ் பில்லுவின் ஜாகைக்கு செல்லுகிறார். அவ்விடம் பில்லு பாட்டுகச்சேரி வைத்து தமாஷ் காட்டி அவரை மது பானம் செய்ய வைக்கிறான். அன்று எல்லோரும் தூங்கும்போது அந்த ஜாகையை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த கந்தன் ஜெகடீஷை அணுகி பில்லுவிடம் உள்ள பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளும்படியும், ஊருக்கு போவதாக சாக்கு சொல்லி அவ்விடமிருந்து மறுநாளே வெளியேறித் தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கும்படியும் யுக்தி சொல்லி பிறகு அடுத்த அறையில் தூங்கி கொண்டிருந்த பில்லுவின் தலையணைக்கு அடியில் உள்ள மணி பர்சை எடுத்துக்கொண்டு போய் விடுகிறான். அதே ஊரில் வெகு சமீபத்தில் ஜெகதீஷின் நண்பன் சுந்தர் என்பவன் வசித்து வருகிறான் ஆனால் அவ்விருவருக்கும் பரஸ்பரம் இருப்பிடம் தெரியாததால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிய வில்லை ஜெகதீஷின் பணத்தை எடுத்துக்கொண்டு அதிகாலையிலேயே ரயில் ஏறிவிட வேண்டுமென்ற துர் எண்ணத்துடனிருந்த பில்லு, தூங்கி விழித்து மணி பர்சை காணாமல் தன் எண்ணம் பாழானதை குறித்து வேதனைப்படுகிறான்.
கந்தனின் யோசனைப்படி காலையில் ஜெகதீஷ் தன சாமான்களுடன் பங்களாவை விட்டு வெளியேறும்போது பில்லு, அவருடைய பணத்தை தான் வேறொரு இடத்தில் பந்தோபஸ்து செய்து வைத்திருப்பதாகவும், சிலவுக்கு வேண்டுமானால் கொஞ்சம் பணம் கொடுப்பதாகவும் சொல்ல, அதற்கு ஜெகதீஷ் தன்னிடம் இன்னும் ரூ.5,000/- வரை இருப்பதால் சிலவுக்கு பணம் தேவையில்லை என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் பில்லுவுக்கு ஆசை அதிகரித்து ஜெகதீஷை கொலை செய்து அவரிடம் உள்ள பணத்தை அபகரிக்க வேண்டுமென்ற சூழ்ச்சியுடன் அன்று மாலை கபேக்கு (cafe) வந்து தன்னிடமிருக்கும் பணத்தை வாங்கி கொள்ளச் சொல்லி அவரை அனுப்பி விடுகிறான்.
அன்று மாலை பில்லு, கபேயில் பாலு, பிரதர் என்ற இரு சகாக்களுடன் சுந்தரி என்ற தாசியை வைத்துக் கொண்டு ஜெகதீஷை எதிர்பார்த்திருக்கிறான். ஜெகதீஷ் தன சாமான்களை கந்தனிடம் ஒப்புவித்து விட்டு அன்று மாலை பில்லுவை கபேயில் சந்திக்கிறான். அங்கே பில்லு சுந்தரியைக் கொண்டு அவரிடம் சரசம் செய்யும்படி செய்து அவருக்கு மது பானம் கொடுக்கிறான். அப்பால், பில்லு தன் முன்னேற்பாட்டின்படி அன்று இரவு ஜெகதீஷை தன் வீட்டுக்கு கூட்டி வந்து சுந்தரியைக் கொண்டு அவரைக் கொலை செய்ய யத்தனிக்கும்போது அவர் அவரிடமிருந்து சாமர்த்தியமாய் தப்பி ஓடுகிறார். பில்லுவும் அவன் சகாக்களும் அவரை எதிர் கொள்கிறார்கள். அவர்களை அடித்து வீழ்த்தி விட்டு ஜெகதீஷ் வீட்டின் வெளியே உள்ள ஒரு காரில் குதித்து வேகமாக ஓட்டிக்கொண்டு போகும்போது பில்லுவும் அவன் ஆட்களும் வேறு ஒரு காரில் பின்னால் வருகிறார்கள். ஊருக்கு வெளியேயுள்ள ஒரு சாலையில் ஜெகதீஷின் காரில் கோளாறு ஏற்பட்டு நின்று விடுகிறது. பில்லுவும் அவன் ஆட்களும் அவ்விடம் வந்து சேருகிறார்கள். அவர்களுடன் ஜெகதீஷ் தீவிரமாகப் போராடிக் கடைசியில் களைத்துப் போயிருக்கும் போது, அவர்களில் ஒருவன் ஜெகதீஷின் தலயில் அடிக்க ஜெகதீஷ் மயங்கி கீழே விழுகிறார். அச்சமயம் அவ்வழியே கொஞ்ச தூரத்தில் வரும் ஒரு காரின் சப்தத்தை கேட்டு எல்லோரும் ஓடி விடுகிறார்கள்.
மேற்கூறியவை நிகழும்பொழுது ஜெகதீஷின் சகோதரன் பையனுக்கும் மனைவி காமாட்சிக்கும் கெட்ட கனவுகளும் அபச குணங்களும் தோன்றுகின்றன. பையன் ஜெகதீஷை தேடிக்கொண்டு புறப்பட்டு வருகிறார். ஜெகதீஷின் சாமான்களை வாங்கி வைத்துக் கொண்டிருந்த கந்தன் அவரை தேடிக் கொண்டிருந்தபோது தற்செயலாய் பில்லுவை சந்தித்து விசாரிக்கிறான். கந்தனைக் கண்ட பில்லு திகிலடைந்து ஜீகடீஷ் ஊருக்கு போய் விட்டதாகவும், ரூ. 10 தன்னை கொடுக்கும்படி தெரிவித்தாகவும் சொல்லிப் பணத்தை கொடுக்கிறான்.
அதைக் கந்தன் வாங்கிக் கொண்டு ஜெகதீஷை ஸ்டேஷனில் சந்திப்பதற்காக அவருடைய சாமான்களை ஒரு வண்டியில் எடுத்துக்கொண்டு போகும்போது அதே வழியில் வந்த பையனின் மோட்டார் அந்த வண்டியில் மோதி சாமான்களெல்லாம் கீழே விழுகின்றன. அப்போது ஜெகதீஷின் பெட்டி ஒன்றை பையன் கவனித்து, கந்தனிடம் அவர் வரலாற்றினை தெரிந்து கொண்டு அவனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று பிராது (புகார்) கொடுக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னிடம் கந்தன் கொடுத்த ஜெகதீஷின் பர்சினை வாங்கிப் பையனிடம் கொடுத்து விட்டு துப்பு விசரிப்பதாக சொல்லி அவர்களை அனுப்பி விடுகிறார். அடிபட்டு விழுந்து கிடந்த ஜெகதீஷ் தடுமாறி எழுந்திருந்து அவ்வழி வந்த காரை நிறுத்துகிறார். தற்செயலாக அந்த காரில் இருந்த சுந்தர் (பால்ய சிநேகிதன்) அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு தன் வீட்டுக்கு வந்து அவருக்கு வைத்தியம் செய்விக்கி கிறான். ஜெகதீஷ் குணமடைந்து வருகிறார். போலிசுக்கு தகவல் கொடுத்த பின்பு பையனும், கந்தனும் கடற்கரையில் பில்லுவை பார்க்கிறார்கள் கந்தன் அவ்விடம் வந்து சேருகிறான். பையனும், கந்தனும் அவனை பின் தொடர்ந்து அவன் (பில்லு) வீட்டை அடைகிறார்கள் பையன் கந்தனை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் தகவல் கொடுக்க சொல்லி அனுப்பி விட்டு அந்த வீட்டிற்குள் சென்று பில்லுவுடன் தந்திரமாக பேசிக் கொண்டிருக்கும் போது அபி நயக் கச்சேரி செய்த சுந்தரிக்கு இனாம் கொடுப்பதற்காக பர்சை எடுக்கிறார். அதில் ஜெகதீஷ் என்ற பெயர் போட்டிருப்பதை பில்லு பார்த்து சந்தேகித்து பையன் பேரில் பாய்கின்றான்.
போது அபி நயக் கச்சேரி செய்த சுந்தரிக்கு இனாம் கொடுப்பதற்காக பர்சை எடுக்கிறார். அதில் ஜெகதீஷ் என்ற பெயர் போட்டிருப்பதை பில்லு பார்த்து சந்தேகித்து பையன் பேரில் பாய்கின்றான். இருவருக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸார் கந்தனுடன் வீட்டில் நுழைந்து பில்லுவை கைது செய்கின்றனர். அப்பால் (பின்பு) பையன் கண்டனுக்கு புத்திமதி சொல்லி அவனை அனுப்பி விட்டு ஊருக்கு திரும்புகிறார்.
ஒரு நாள் இரவு சுந்தர் வீட்டில் திருடர்கள் வர அவர்களை ஜெகதீஷ் அடித்து துரத்தி தன்னைக் காப்பாற்றிய நண்பனுக்கு தக்க சமயத்தில் உதவி செய்கிறார். பிறகு சுந்தரிடம் விடை பெற்றுக்கொண்டு ஜெகதீஷ் தன் ஊர் திரும்புகிறார். பில்லு தண்டனை அடைந்து சிறை செல்லுகிறான். ஜெகதீஷ் வீடு வந்து சேருகிறார். பிரிவால் கவலையுற்றிந்த சதிபதிகள் (கணவன் - மனைவியர்) சந்தோஷத்துடன் இருக்கிறார்கள்.
சுபம்.
*********
பாடல்கள் :
1. கடவுள் வணக்கம் பாடல் : ஸ்ரீ கணபதிநி சேவிம்பாரே (பல்லவி)
வாகாதிபதி ஸுபூஜல சேகொனி (அனு பல்லவி)
பநச நாரி கேளாதி (சரணம்)
2. பெண் குரல் தனித்த பாடல் : தேவா துணை புரிவாய்
3. லேடி பாகவதர் பாட்டு : தேவி சுபகதி ( பல்லவி )
நினு நாமதி பக்திதோ கொலுதுனு (அனு பல்லவி)
4. நடனப் பாட்டு : முரளி கான விலோல (பல்லவி)
சலமுந கனவுகதா மனவினி (அனு பல்லவி)
ஈடு ஜோடுமேல் ஒளனா (சரணம்)
5. பெண் குரல் தனித்த பாடல் : கமலாஸனி கருணா ரஸம் பொழியும்
6. பெண் குரல் தனித்த பாடல் : எனக்கே நிகர் யாரோதான் பாரின் மீதே இனி
7. பெண் குரல் தனித்த பாடல் : ஹா - இதென்ன அன்யாயம் அகதி என்ன செய்வேன்
8. ஆண் குரல் தனித்த பாடல் : இஷ்டமுல்லா குட்டி என்னை விட்டு வந்தாரே
9. ஆண் குரல் தனித்த பாடல் : காங்க்ரஸ் மந்திரிகள் முயன்றால் கதியுண்டு
10. ஆண் குரல் தனித்த பாடல் : வாங்க வாங்க எசோதரரே சுதேசி சாமான் கோ
11. பெண் குரல் தனித்த பாடல் : யாது செய்குவேனே - ஈசனே நானே
12. பெண் குரல் தனித்த பாடல் : இதோ வருவார் இதோ வருவார் மனோஹரா வசீகர துரையே
13. ஜோடிப் பாடல் : இது சுப தினம் எனக்கே ஆனந்தம்.
*********
Comments
Post a Comment