தட்சயக்ஞம் - 31.03.1938 ||

 




கதாபாத்திரம் :  விஷ்ணு

 



நடிகர்கள் & கதாபாத்திரப் பெயர்கள் :

வி. ஏ. செல்லப்பா - சிவன்

எம். ஜி. நடராஜ பிள்ளை - தக்ஷன்

சி.எஸ்.செல்வரத்னம் - நாரதர்

வி. நடராஜன் - பிரம்மா

எம். ஜி. ராமச்சந்தர் - விஷ்ணு

பி.ஜி. வெங்கடேசன் - சந்திரன் & ராஜகுரு

கே.எஸ்.வேலாயுதம் - நந்தி

வி எஸ். கிருஷ்ணமூர்த்தி - பிருகு

பி. கலயனசுந்திரம் - ததீசி

என். எஸ். கிருஷ்ணன் - மன்மதன்

கே.எஸ் சங்கர ஐயர் - வசந்தன்

எம். பி. ராதா பாய் - சதி

கே. ஆர். ஜெயலட்சுமி - கியாதி

பி ஆர் மங்களம் - அஸ்வதி

எல்.சந்திரிகா - ரோகினி

டி. என். சந்திராம்மாள்

டி. ஏ. மதுரம்

       

வசனம் & பாடல்கள் - எம்.கே.தியாகராஜா தேசிகர்

இசை - என். எஸ். பாலகிருஷ்ணன்

தயாரிப்பு - மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்

திரைக்கதை & இயக்கம் - ராஜா சந்திரசேகர்



கதைச் சுருக்கம்


 ஹரன் கொடுத்த வரத்தின் மகிமையினால் அண்டங்களுக்கெல்லாம் அதிபனான தக்ஷன் தனது பிதாவான பிரம்மதேவனிடம் தனது பெருமைகளைப்பற்றிற்புகழ்ச்சியாகக் கூறிக் கொள்கிறான். இம்மட்டோடில்லாமல், தனது குமாரர்கள் ஆயிரமரும், ஹரனிடமிருந்து கடுந்தவத்தின் பயனாக, சிருஷ்டி யதிகாரத்தையும் பெறுவரேல், தனது அதிகாரத்துக்கு அடங்காதது யாதொன்றுமே யிராதென்று மிக்க செறுக் குற்ற தக்ஷணின் செவிகளில் பிரும்ம விஷ்ணுக்களின் உபதேசங்கள் கிஞ்சித்தேனும் புகவில்லை. எல்லாம் வல்லவர் இறைவன் ! செறுக்குற்றோர் சீரோடிருப்பது எத்துணைகாலம்! நாரதமாமுனியின் உபதேசத்தின் காரணம்பற்றி, தக்ஷசுதர்கள் ஹரனிடமிருந்து சிருஷ்டி யதிகாரத்தைப் பெறுவதற்கு மாறாக மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை வரமாகப் பெறுகிறார்கள். தனது எண்ணங்கள்யாவும் வீணானதையறிந்து கோபங்கொண்ட தக்ஷன், “நின்றவிடம் நில்லாமல் கலகப்ரியனாக அலைவாயாக என்று மாமுனி நாரதரைச் சபிக்கிறான். புதல்வர்கள் தான் எண்ணிய காரியத்துக்கு அபாத்திரர்களானதால் மனத்தாங்கல் ஏற்பட்ட தக்ஷனுக்கு இன்னும் என்ன நேர்ந்தது ! அவனுடைய புதல்வியர்கள் இரு பத்தெழுவருள் ரோகிணி தவிர மற்ற இருபத்தி அறுவரும் மிக்க மனமுடைந்து பிறந்தகம் திரும்புகின்றனர்கள் இதன் காரணம் யாது? அவர்களின் கணவனான சந்திரன் ரோகிணியின் பொருட்டு மாத்திரம் தனிப்ரேமை கொண்டு மற்றவர்களைப் புறக்கணிக்கிறான். 

இது கேட்ட தக்ஷன் சந்திரன் தனது மருகன் என்பதைக்கூட கவனியாமல் மிக்கக் கோபங்கொண்டு, சந்திரன் நாளுக்குநாள் தனது மேனி குன்றி ஒளியும் மங்கிப்போம்படி சபிக்கின்றான். 

சந்திரனா சிவபிரானையணுகி இக்கொடிய சாபத்தினின்று உத்தாரம் பெறுகிறான். தனது சாபத்திற்கும் ஓர் மாற்று செய்த மையால் தக்ஷனுக்கு சிவத்வேஷ முண்டாகிறது.

 சிவத் வேஷமாகுமா?

அது குல நாசமல்லவா! இந்த த்வேஷ புத்தியினால் தக்ஷனுக்கு யேற்பட்டதென்ன? காளிந்தி நதியில், நீராடச் சென்ற ப்ரஸூதி (தக்ஷ - பத்னி) அழகியதோர் தாமரை மலரைப் பறிக்க, அது வோர் பெண் குழந்தை யாகிறது; அக்குழந்தை தான் நாளடைவில் யௌவன மங்கையாகிய தேவி - பராசக்தி. சதி மகா தேவனைக் காதலிக்கிறாள்- சிவத்வேஷம் நிறைந்த தக்ஷனா இதை ஆமோதிப்பான்--மகேஸ்வரனைத் தவிர மற்ற யாவத்ராளையும் சுயம்வரத்திற்கு அழைக்கிறான் :- தக்ஷபத்னி ப்ரஸூதி, ஓர் தூதன்மூலம் ஈஸ்வரனுக்கு அழைப்பு அனுப்புகிறாள் - சரியான காலத்திலேயே சங்க ரன் ஸதியை யேற்று கைலை யேகுகிறார்.எரிகிற நெருப்புக்கு எண்ணை ஊற்றப்பட்டதுபோல தக்ஷனின் சிவத்வேஷம் மேன்மேலும் அதிகரிக்கின்றது. ஈஸ்வரனுக்குரித்தான ஹவிர்ப்பாகங்களை ஒருவரும் அர்ப்பணம் செய்யக்கூடாதென உத்தரவிடுகின்றான். தருமம் ஒருபுறம், தண்டனை மறுபுறம் இரண்டிற்கு மிடையில் பயந்த மாந்தர் யாகம் செய்வதை அறவே விடுகின்றனர்.”துர்பிக்ஷம் தேவலோகேஷ” 

மாசூல் இல்லையேல் பஞ்சந்தானே-தேவலோகத்தின் மாசூல் ஹவிர்ப்பாகமல்லவா?. ஆகையால் தக்ஷராஜனே ஓர் யாகம் செய்ய உத்தே சிக்கிறான் - பிரும்மா, விஷ்ணு, அஷ்டதிக்பாலர்கள்,முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் மற்றெல்லோரும் அழைக்கப்படுகின்றனர்.ஆனால் மகேஸ்வரன் மாத்திரம் அழைக்கப்படவில்லை,காரணம் யாது; இது தக்ஷனின் சிவத்வேஷமும் கடுங்கோபமுமே யாகும்.முன்னர், தக்ஷராஜன் சங்கரரிடம் த்வேஷம் பாராட்டினான் - சக்தியையே புதல்வியாகப் பெற்றான். இத் வேஷம் மேன் மேலும் அதிகரிக்கப்பட்டு, தான் செய்யப் போகவிருக்கும் யக்ஞத்துக்கு சங்கரரையே யழையாது விடுகின்றனன். 

இந்த யக்ஞத்தின் பூர்ணாஹுபதி கொடுக்கப்பட்டதா? மாமன். மாப்பிள்ளைகளினிடையிருந்த பூசல்கள்தான் விலகினவா என்பதை வெள்ளித் திரையில் காணுங்கள்.


***********





பாடல்கள் : 


ஸ்ரீகணேச பாஹிமாம் சந்ததம்

தனியாய் எனை விடுத்தாய் சதியே நீ

வருவாயே தின்பம் தருவாயே

ஸ்ரீமந்நாராயண கோவிந்தா

மழையில்லா சீமையில் மாடுகள் பூட்டி

ஆதியில் பாற்கடல் விஷத்தினை உண்டு

பரமானந்த சுபதினம்

மனமோகனாங்க சுகுமாரா

மனதிற்கிசைந்திடாத மணத்தினாலே

ஹர ஹர ஹர ஹர அகிலாதிபனே

சிவானந்த ரசம் இதுவே

பெறும் புவிதனிலே மாந்தர் பெருநெறி

ஹா மாதர் மனோகர வாழ்க்கை

அஞ்சி உன் கட்டளைக்கே

அதிரூப லாவண்ய சுந்தரா

மாதருக்கெல்லாம் குணம்

பவாநீ பவாநீ பவாநீ

வாருங்கள் எல்லோரும் தட்சன்

இருவரும் ஒன்றாய் கூடி வாழலாம்

பார்வதியாக ஜனிப்பாய்



Comments